ஊருக்குச் சென்றவர்கள் சென்னைக்குத் திரும்ப  சிறப்பு ரயில்கள்!

Published On:

| By Kavi

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகவும் மதுரையில் இருந்தும் தூத்துக்குடியில் இருந்தும் சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து அவர்களுடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். வருகிற சனிக்கிழமையில் இருந்து சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஞாயிறு அன்று அதிக அளவில் சென்னை திரும்புவார்கள் என்பதால் ரயில், பேருந்துகளில் கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் ஏற்பாடு வாய்ப்புள்ளது. இதை கருத்தில்கொண்டு தென்னக ரயில்வே மதுரையில் இருந்து சென்னைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயிலை இயக்குகிறது. 

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள தகவலில், ‘பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக 18-ம் தேதி  மாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு MEMU ரயில் இயக்கப்படும். திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மார்க்கமாக நள்ளிரவு 12.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்’ எனத் தெரிவித்துள்ளது.

அடுத்து, ‘தூத்துக்குடி – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயிலானது (ரயில் எண் 06168) வருகிற 19-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.25 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று ( ஜனவரி 15) காலை  தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில்  மேலூர், வாஞ்சி மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஶ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நல்லவேளை தப்பிச்சிட்டேன்… அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel