திருச்சி, நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில்… டைமிங் என்ன தெரியுமா?

Published On:

| By christopher

ஆடி அமாவாசை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு நெல்லை, நாகர்கோவில், திருச்சிக்கு இன்று (ஆகஸ்ட் 2) சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வெளியூருக்கு செல்வோர் குறிப்பாக சென்னையில் உள்ள தென்மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு வசதியான போக்குவரத்திற்கு ரயில் பயணம் பார்க்கப்படுகிறது. மேலும் பேருந்து பயணத்துடன் ஒப்பிடும் போது, டிக்கெட் கட்டணமும் குறைவாக உள்ளது.

எனினும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டுமென்றால் 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயிலில் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். இல்லையென்றால் முன்பதிவில்லாத பெட்டியில் கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டியிருக்கும்.

இந்த நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று திருச்சி மற்றும் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரம் – திருச்சி!

அதன்படி, தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு இன்று இரவு 11 மணிக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில் (எண் 06007) இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாளை காலை  6:40 மணிக்கு திருச்சியை சென்றடையும்.

மறு மார்க்கமாக நாளை (ஆகஸ்ட் 3) இரவு திருச்சியில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06008 ) காலை தாம்பரத்திற்கு 5.50 மணிக்கு வந்து சேரும்.

தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக திருச்சியை சென்று சேருகிறது.

சென்னை எழும்பூர் – நாகர்கோவில்!

இதேபோன்று சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 10. 45 மணிக்கு புறப்படும் ரயிலானது நாளை காலை 11 மணிக்கு நாகர்கோயிலை சென்றடையும்.

இந்த ரயில் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக நாகர்கோயிலுக்கு செல்கிறது.

இந்த ரயிலில் 11 முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள், 2 ஏசி வகுப்பு பெட்டிகள், 3 முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் ஆகியவை இடம் பெற்று இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

விக்ரம் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்: தங்கலான் ஆடியோ லாஞ்ச்… செகன்ட் சிங்கிள் அப்டேட்!

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 3வது பதக்கத்தை வெல்வாரா மனு பாக்கர்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel