பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும்,
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஐந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு நேற்று முதல் இயக்கப்படுகின்றன.
இதற்கான முன்பதிவுகள் அனைத்தும் முடிந்த நிலையில் சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு கூடுதல் பொங்கல் சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி தாம்பரம் – நெல்லை அதிவிரைவு சிறப்பு ரயில் (06049) ஜனவரி 14ஆம் தேதியன்று தாம்பரத்திலிருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு நெல்லை செல்லும்.
அதேபோல், மறு மார்க்கத்தில் நெல்லை- தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06050) நெல்லையில் இருந்து ஜனவரி 18ஆம் தேதியன்று மாலை 05.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முன்பதிவு இன்று (ஜனவரி 13) காலை 8 மணிக்குத் தொடங்கவுள்ளது.
இந்தச் சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதேபோல், இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள்,
6 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
-ராஜ்
டெல்லி செல்லும் ஆளுநர் ஆா்.என்.ரவி
பொம்மைகள் பறிமுதல்: ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் !