ஒடிசா ரயில் விபத்து: புவனேஷ்வர் – சென்னை சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு!

Published On:

| By christopher

ஒடிசா பாலசோர் பகுதி ரயில் விபத்து காரணமாக இன்று (ஜூன் 3) இதுவரை 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 39 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்திலுள்ள பாஹாநகர் சந்தை ரயில் நிலைய பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் மேற்கு வங்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சென்னை – கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.

அதே நேரத்தில் கர்நாடகாவின் பெங்களூர் நகரில் இருந்து மேற்கு வங்கம் நோக்கி சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட பெட்டிகளின் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. அதனுடன் எதிரே வந்த சரக்கு ரயிலும் விபத்தில் சிக்கியது.

இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது.

அதே வேளையில் 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விபந்து நடந்த பாலசோர் தடத்தின் வழியாக செல்லும் 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், 39 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டும் உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து ஹவுரா செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயும் அறிவித்துள்ளது.

மேலும் சென்னை நோக்கி வந்த கோர மண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 867 பயணிகள் சென்னைக்கு முன்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் விபத்தில் பாதிக்கப்படாத தமிழர்களை சென்னைக்கு அழைத்து வரும் விதமாக புவனேஷ்வரிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயிலும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

கலைஞர் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் ரத்து: திமுக அறிவிப்பு!

மனச்சோர்வை விரட்ட என்ன வழி?!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel