சென்னை: தற்காலிக பேருந்து நிலையங்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள்!

தமிழகம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையில் பொது மக்களின் வசதிக்காக, வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் தற்காலிக பேருந்து நிலையங்களுக்குச் செல்ல சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து 340 சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இன்று (ஜனவரி 12) முதல் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஜனவரி 12முதல் ஜனவரி 14வரையிலும்,

பயணிகள் திரும்பி வருவதற்காக ஜனவரி 18முதல் ஜனவரி 19வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்பேரில், சென்னையில் வெவ்வேறு இடங்களிலிருந்து போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், பொது மக்களின் வசதிக்காக வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்,

பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம் (MEPZ) மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையங்களுக்குச் செல்ல சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து 340சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பிராட்வே, தி.நகர், ஆவடி, திருவான்மியூர், பூந்தமல்லி, திருவொற்றியூர், எண்ணூர், குன்றத்தூர், திருப்போரூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு 69முழுநேர பேருந்துகள், 58மாலை மற்றும் இரவு நேரப் பேருந்துகள் என மொத்தம் 127பேருந்துகள் இயக்கப்படும்.

special town bus service for pongal bus stands

வேளச்சேரி, திருவான்மியூர், செங்கல்பட்டு, அடையாறு, மாமல்லபுரம், பிராட்வே, தி.நகர், சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர், கோவளம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தாம்பரம் புதிய பேருந்து நிலையத்துக்கு 89முழுநேர பேருந்துகள், 26 மாலை மற்றும் இரவு நேர பேருந்துகள் என மொத்தம் 115பேருந்துகள் இயக்கப்படும்.

வள்ளலார் நகர், செங்குன்றம், தாம்பரம், திருவொற்றியூர், பிராட்வே, அம்பத்தூர், மந்தைவெளி, தி.நகர், அம்பத்தூர் எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் இருந்து பூந்தமல்லிக்கு 42 முழுநேர பேருந்துகள், 15 மாலை மற்றும் இரவு நேர பேருந்துகள் என மொத்தம் 57 பேருந்துகள் இயக்கப்படும்.

வடபழனி, கோயம்பேடு மார்க்கெட், கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து கூடுவாஞ்சேரி, தாம்பரம், பெசன்ட் நகர், கிளாம்பாக்கம், பிராட்வே பேருந்து நிலையங்களுக்கு 8 முழுநேர பேருந்துகள் இயக்கப்படும்.

எண்ணூர், மாதவரம், செங்குன்றம், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், செங்குன்றம், பிராட்வே பேருந்து நிலையங்களுக்கு 18 முழுநேர பேருந்துகள், 8 மாலை மற்றும் இரவு நேர பேருந்துகள் என மொத்தம் 26 பேருந்துகள் இயக்கப்படும்.

வடபழனி, மீஞ்சூர், செங்குன்றம் ஆகிய இடங்களிலிருந்து பிராட்வே பேருந்து நிலையத்துக்கு நான்கு முழுநேர பேருந்துகள், மூன்று மாலை மற்றும் இரவு நேர பேருந்துகள் என மொத்தம் ஏழு பேருந்துகள் உட்பட 230 முழுநேர பேருந்துகள்,

110 மாலை மற்றும் இரவு நேர பேருந்துகள் என மொத்த 340 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

-ராஜ்

ரஷ்யாவின் அடக்குமுறை தடுத்து நிறுத்தப்படும்: உக்ரைன் அதிபர் உறுதி

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா : கல்கண்டு பொங்கல்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *