சிறப்பு எஸ்ஐ பதவி உயர்வு பெற பத்து ஆண்டுகள் தலைமை காவலராக பணியாற்றியிருக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு Special SI Promotion High Court

சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வு: உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

தமிழகம்

சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வு பெற பத்து ஆண்டுகள் தலைமை காவலராக பணியாற்றியிருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த ராமசாமி என்பவர், 25 ஆண்டுகள் காவல் துறையில் பணியாற்றிய தனக்கு சிறப்பு எஸ்.ஐ . ஆக பதவி உயர்வு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ராமசாமிக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசும், காவல் துறையும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன.

 1979ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணி நியமனம் பெற்ற ராமசாமி, 1997ம் ஆண்டு முதல் நிலை காவலராகவும், 2002ம் ஆண்டு தலைமைக் காவலராகவும் பணியாற்றி 2009ல் பணி ஓய்வு பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சத்திகுமார் அமர்வு, சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வுக்கு 10 ஆண்டுகள் தலைமைக் காவலராக பணி புரிந்திருக்க  வேண்டும் என முழு அமர்வு உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியது.

ஏழு ஆண்டுகள் மட்டுமே தலைமைக் காவலராக பணியாற்றிய மனுதாரருக்கு பதவி உயர்வு பெற உரிமையில்லை எனக் கூறி, அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

கலை.ரா

“தனுஷ் 50”: சன் பிக்சர்ஸ் புது அப்டேட்!

பணி நீக்கம் அச்சத்தில் 10,000 மைக்ரோசாப்ட் ஊழியர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.