சிறப்புத் திட்டத் துறையின் செயல்பாடுகள்: உதயநிதி ஆய்வு!

Published On:

| By Prakash

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 17) சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாகவும், அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன் இத்துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

பின்னர் அமைச்சர் உதயநிதி, மக்களை தேடி மருத்துவம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் புதுமைப் பெண் திட்டங்களின் முன்னேற்றத்தைக் குறித்தும் அத்திட்டங்களினால் மக்களுக்கு ஏற்பட்ட பயன்கள் குறித்தும், இத்திட்டங்களை கண்காணிக்கும் விதம் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

இந்த ஆய்வில் அமைச்சர் உதயநிதி, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அரசின் கண்காணிப்பு அமைப்பாக திறம்பட செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன்,

பயனாளிகளுக்கு அரசு அறிவிக்கும் பலன்கள் சென்று சேர்வதை இத்துறை மேலும் முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஜெ.பிரகாஷ்

நிதீஷை முதல்வராக்கியதற்காக வருத்தப்படுகிறேன்: பிரசாந்த் கிஷோர்

தீபிகா காவி உடை: பாஜக எம்.பிக்கு பதிலடி கொடுத்த நடிகை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel