பெண்களை துரத்திய புகாரில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், கார் உரிமையாளரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். special forces chasing car owner!
சென்னை புறநகரின் மிக முக்கியமான சாலையாக ஈசிஆர் உள்ளது. இந்த நிலையில் கடந்த 25ம் தேதி நள்ளிரவில் சென்னை ஈசிஆர் கானத்தூர் பகுதியில் திமுக கொடி கட்டிய காரில் சென்ற இளைஞர்கள், பெண்கள் சென்ற காரை வழிமறித்து நின்ற வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் கானத்தூர் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கிடையே தாம்பரம் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு தனிப்படைகள் தலைமறைவான இளைஞர்களை தீவிரமாக தேடி வருகிறது.

குறிப்பாக சஃபாரி காரின் சொந்தக்காரரான தாம்பரம் அடுத்த இரும்புலியூர் சேர்ந்த சந்துருவையும், காரில் பயணித்தவர்களில் ஒருவரான சுபாஷையும் தனிப்படை போலீசார் குறி வைத்து தேடி வருகின்றனர்.
இருவரின் செல்போன்களும் தற்போது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளன. எனினும் அவர்களை பிடிக்கும் பட்சத்தில் மற்ற 6 பேரையும் எளிதாக பிடிக்க முடியும் என தொழில்நுட்ப உதவியுடன் தனிப்படை போலீசார் முதலில் இருவரையும் குறிவைத்து தேடி வருகின்றனர்.