தமிழகத்தில் போலீசார் பொதுமக்கள் இடையே நல்லுறவைப் பேண தமிழ்நாடு அரசு 10கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையேயான தொடர்பை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 24) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், “காவல் நிலையங்களை அணுகும் பொதுமக்களின் வசதிக்காக முதற்கட்டமாக 250 காவல் நிலையங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் செலவில் வரவேற்பறை, பார்வையாளர்களுக்கான கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் காத்திருப்பு கொட்டகைகள் ஆகியவை மொத்தம் 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்று முதல்வரால் 2023-2024ஆம் ஆண்டுக்கான காவல் துறை மானியக் கோரிக்கையின்போது பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், காவலர் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் பொருட்டு 250 காவல் நிலையங்களில், வரவேற்பறை, பார்வையாளர்களுக்கான கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் காத்திருப்பு கொட்டகைகள் போன்ற சிறப்பு வசதிகளை ஏற்படுத்திட ரூபாய் 10 கோடி வழங்குவதற்கு நிர்வாக ஒப்பளிப்பு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
மணிப்பூர் கொடூரம்: தமிழகம் முழுவதும் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்!
செந்தில் பாலாஜி வழக்கு : நாளை விசாரணை!