Special camp to get duplicate certificate

மழை வெள்ளம்: நகல் சான்றிதழ் பெற சிறப்பு முகாம்!

தமிழகம்

அரசு ஆவணங்களை இழந்த பொது மக்கள் நகல் சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

குன்றத்தூர் வட்டத்தில் மிக்ஜாங், புயலின் தாக்கத்தால் மிக அதிக கனமழை பொழிந்து ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணமாக சேதமடைந்த குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் பள்ளி கல்லூரி சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றின் நகல் சான்றிதழ்களை பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம்.

முகாம்கள் குன்றத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், மாங்காடு வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கொளப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வரதராஜபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், செரப்பணஞ்சேரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் 10.01.2024 வரை காலை 10 மணி முதல் இந்த சிறப்பு முகாம்கள் நடை பெறுகிறது.

எனவே மிக்ஜாங் புயலினால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணமாக சான்றிதழ்கள் மற்றும் அரசு ஆவணங்களை இழந்த பொது மக்கள் நகல் சான்றிதழ்களைப் பெற சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்களில் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: ரிச் வடை!

ரஜினி பிறந்தநாள் : தலைவர் 170 அப்டேட்!

எம்.பி.யிடம் கரன்சி குவியல்: இறங்கியடிக்கும் மோடி-அமித் ஷா… திணறும் காங்கிரஸ்

அவைகுறிப்பிலிருந்து பெரியார் பெயர் நீக்கம்: ஸ்டாலின் கண்டனம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *