சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா!

தமிழகம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

அந்த வகையில் சென்னையை அடுத்த மறைமலை நகர் கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா இன்று (ஆகஸ்ட் 21)  முதல் வருகிற 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தச் சிறப்பு தொழில் கடன் மேளாவில் டி.ஐ.ஐ.சி (Tamil Nadu Industrial Investment Corporation Limited)-ன் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவிகிதம் முதலீட்டு மானியம் ரூ.1 கோடியே 50 லட்சம் வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவிகிதம் சலுகை அளிக்கப்படும்.

இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு 9445023494, 9342654834, 9445023507, 7845529657 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என்று  தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

டி20: தொடரை வென்றது இந்திய அணி!

திருப்பதி நவம்பர் மாத தரிசனம்: எந்த தேதியில் எதற்கான டிக்கெட்டை பெறலாம்?

+1
3
+1
1
+1
0
+1
5
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *