இன்று மின்சார ரயில்கள் ரத்து: தாம்பரத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
இன்று (செப்டம்பர் 15) மின்சார ரயில் பகுதி அளவு ரத்தால் பயணிகள் நலன் கருதி தாம்பரத்தில் இருந்து கூடுதலாக 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் எக்ஸ்தளப் பதிவில், தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று (15.09.2024) காலை 09.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே, இன்று அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக தாம்பரத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள், தி.நகர் பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் மற்றும் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: டென்ஷனான நேரத்தில் கலங்கும் வயிறு… காரணமும் தீர்வும்!
டாப் 10 நியூஸ் : பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முதல் விநாயகர் சிலை கரைப்பு வரை!
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… சிறுதானியங்களில் சமைக்க சிரமப்படுகிறீர்களா?
நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு… எண்டு கார்டு போட்ட அன்னபூர்ணா