தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (அக்டோபர் 10 ) நடைபெற்றது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் சேர்த்து 4,218 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 10,518 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீபாவளிக்கு பின்பு நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை அக்டோபர் 24 முதல் 26 வரை 13,152 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அக்டோபர் 24 ஆம் தேதி தினசரி 2,100 நிர்ணய பேருந்துகள் இயக்கப்படும். அதேநேரத்தில் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 530 சிறப்புப் பேருந்துகளும் சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 580 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல், அக்டோபர் 25 ஆம் தேதி தினசரி நிர்ணயப் பேருந்துகள் 2,100, பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 1,678 சிறப்புப் பேருந்துகளும்,
சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 2,080 சிறப்புப் பேருந்துகளும் அக்டோபர் 26 ஆம் தேதி தினசரி இயக்கப்படும் நிர்ணயப் பேருந்துகள் 2,100,
பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 854 சிறப்புப் பேருந்துகள் மற்றும் சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 1,130 சிறப்புப் பேருந்துகளும்,
மொத்தம் தினசரி இயக்கப்படும் நிர்ணயப் பேருந்துகள் 6,300 மற்றும் சிறப்பு பேருந்துகள் 6,852 ஆக மொத்தம் 13,152 பேருந்துகள் தீபாவளிக்கு பிறகு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நானும் தோனியோட ஊருதான்: சிக்ஸர் மழை பொழிந்த இளம் வீரர்!
தீபாவளி: எத்தனை சிறப்பு பேருந்துகள்?