பொங்கல் பண்டிகைக்கு பிறகு சென்னை திரும்பும் பயணிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 11,284 பேருந்துகள் இயக்கப்பட்டதில் சுமார் 4.34 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 7,474 பேருந்துகள் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு இயக்கப்பட்டன.
இதே போல் சுமார் 4,000 பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இயக்கப்பட்டன. பொங்கல் விடுமுறை இன்றுடன் முடிவடையும் நிலையில் சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னைக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு இயக்கப்படும். 24 மணி நேரமும் கிளாம்பாக்கத்தில் இருந்து இணைப்பு பேருந்துகள் கோயம்பேட்டுக்கு இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு பேருந்துகளின் சேவை, வருகிற 18-ம் தேதி வரை இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
பியூட்டி டிப்ஸ் : வீட்டிலேயே ஈஸியா தயாரிக்கலாம் கண் மை!