உலக அளவில் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதே போல் இந்த வருடத்திற்கான திருவிழா வருகிற 29-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கவிருக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவில் கடைசி நாளான செப்டம்பர் 8 ஆம் தேதி மேரி மாதா பிறந்த நாள் கொண்டாடப்படும்.
இந்த திருவிழாவை காண தமிழகம் முழுவதும் இருந்து கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்வார்கள். ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊரில் இருந்து வேளாங்கண்ணி மாதாவை தரிசனம் செய்வதற்காக நடைபயணம் மேற்கொள்வார்கள்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஏராளமானவர்கள் செல்வார்கள்.
இந்த நிலையில்… பொதுமக்கள் நலன் கருதி அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க உள்ளதாகவும், வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் தவிர வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட் 27 ஆம் தேதி 25 பஸ்களும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி 25 சிறப்பு பஸ்களும் கூடுதலாக இயக்கப்படும் என்று மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறப்பு பஸ்கள் 2 நாட்கள் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மக்களின் தேவைக்கேற்ப பஸ்களை இயக்க தயாராக இருக்கிறோம். சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது என்றும் கூறியுள்ளார். பயணிகளே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
மு.வா.ஜெகதீஸ் குமார்
விடுமுறை முடிவு: 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!