special bus due to thaipoosam

தைப்பூசம், குடியரசு தினத்தையொட்டி தொடர் விடுமுறை: சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு!

தமிழகம்

குடியரசு தினம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை உள்ளதால் 580 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

நாளை மறுநாள் ஜனவரி 25 ஆம் தேதி தைப்பூசம், ஜனவரி 26 குடியரசு தினம், ஜனவரி 27 மற்றும் 28 வார இறுதி நாட்கள் என்பதால் 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

இதனை முன்னிட்டு கல்வி மற்றும் வேலை நிமித்தமாக வெளியூர்களில் ஏராளமானவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். எனவே கூட்ட நெரிசல் இல்லாத பயணத்திற்காக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 405 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 175 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தமாக 580 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

சட்டமன்ற நிகழ்வு – முழுமையாக நேரலை செய்வதில் என்ன பிரச்சினை?: ஐகோர்ட் கேள்வி!

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *