நெருங்கும் தீபாவளி… தயார் நிலையில் அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிறப்பு பிரிவு!

தமிழகம்

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு விபத்துகளில் தீக்காயம் ஏற்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளித்து பாதுகாக்க அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும், சென்னை கீழ்ப்பாக்கம், ராஜீவ்காந்தி, ஸ்டான்லி மருத்துவமனைகளில் பட்டாசு தீக்காயத்தினால் பாதிக்கப்படும் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும்  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீயினால் ஏற்படும் விபத்து மற்றும் அதன் பின்விளைவுகளுக்கு சிகிச்சை அளிக்க தீக்காயம் சிறப்பு சிகிச்சை பிரிவு 1981-ம் ஆண்டு 10 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டது.

தற்போது 75 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது. இதை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர், “தீ விபத்து ஏற்படும்போது 108 ஆம்புலன்ஸ் மூலம் தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் அவர்களை மீட்டு உரிய நேரத்தில் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

இந்த தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் வார்டுகளில் லாமினார் பிளோ எனப்படும் சீராக காற்றை ஒரே திசையில் போக வைக்கும் ஒரு உன்னத தொழில் நுட்ப முறை செயலில் உள்ளது.

இதனால் தீக்காயங்களில் ஏற்படும் தொற்று வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த தீக்காயப் பிரிவின் சிறப்பு என்னவென்றால், அறுவை சிகிச்சை அரங்குகள் ஒரே கட்டமைப்பில் செயல்படுகின்றன.

அதனால் உடனடி அறுவை சிகிச்சைகளோ அல்லது மற்ற அறுவை சிகிச்சைகளோ எந்த ஒரு தாமதமும் இல்லாமல் நடக்கின்றன.

இந்த நிலையில், அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மற்றும் வட்ட மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர், இயற்பயிற்சியாளர், செவிலியர்,  நர்ஸ், உதவியாளர் ஆகியோருக்கு தீக்காயம் குணப்படுத்துவது பற்றிய சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 95 மருத்துவமனைகளுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பட்டாசு விபத்துகளில் தீக்காயம் ஏற்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியும். இதற்காக அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

கடந்த ஆண்டுகளில் தீபாவளியின்போது பட்டாசு விபத்தினால் தீக்காயம் அடைவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த ஆண்டு மேலும் குறையும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: வேளச்சேரி – பீச் ரயில் சேவை முதல் ராகவா லாரன்ஸ் படம் அப்டேட் வரை!

கிச்சன் கீர்த்தனா: சோமாஸ்

விஜய் மாநாட்டில் கவனம் ஈர்த்த தொகுப்பாளினி: யார் இவர்?

“காமராஜரை சொந்தம் கொண்டாட எங்களுக்கே உரிமை” : செல்வப்பெருந்தகை

 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *