எத்தனையோ உணவுகளைச் சாப்பிட்டாலும், சில உணவுகள் மட்டும் ‘இது சூப்பரு’னு மனசுல நிக்கும். அப்படிப்பட்ட ஒன்றுதான் டிக்கி உணவுகள். ஆரோக்கியமான இந்த புதினா டிக்கியை உங்கள் வீட்டிலேயே செய்து அசத்த இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
மசூர் பருப்பு – கால் கப்
புதினா – கால் கப்
இஞ்சி, பச்சை மிளகாய் பேஸ்ட் – ஒரு டேபிள்ஸ்பூன்
கோதுமை பிரெட் தூள் (பிரவுன் பிரெட்) – 2 டேபிள்ஸ்பூன்
துருவிய டோஃபு பனீர் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
புதினாவைப் பொடியாக நறுக்கவும். பருப்பை சுத்தம் செய்து, முதல் நாள் இரவு ஊற விடவும். மறுநாள் நீரை வடித்து விட்டு, புதிதாக 2 கப் நீர் சேர்த்து வேகவிடவும் (குழைய விட வேண்டாம்). பிறகு கரண்டியால் மசிக்கவும்.
எல்லா சாமான்களையும் சேர்த்து, நன்றாகப் பிசைந்து, வடை போல் தட்டி, தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் போட்டு இருபுறமும் சிவப்பாக ஆகும் வரை சுட்டு எடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.
கிச்சன் கீர்த்தனா: புதினா லஸ்ஸி