கிச்சன் கீர்த்தனா: சோயா புலாவ்!

தமிழகம்

சில நாட்களில் திடீர் விருந்தினர்களின் வருகையின்போது என்ன சமையல் செய்வது என்று திண்டாடுவோம். அந்த நாள் அசைவம் சாப்பிட முடியாத நாளாக அமைந்துவிட்டால் மேலும் சிரமமாகிவிடும். அப்படிப்பட்ட நேரத்தில் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு அதன் சுவையை நினைவூட்டும் அருமையான சைவ சமையல் இந்த சோயா புலாவ். 

என்ன தேவை?

 பாஸ்மதி அரிசி – ஒரு கப் (200 கிராம்)
 சிறிய சோயா சங்க்ஸ் – 50 கிராம்
 பெரிய வெங்காயம் – ஒன்று
 பிரிஞ்சி இலை – ஒன்று
 பட்டை – சிறிதளவு
 தேங்காய்ப்்பால் – அரை கப்
 தண்ணீர் – ஒன்றரை கப்
 எண்ணெய் + நெய் – 2 டேபிள்ஸ்பூன்
 முந்திரி – 10
 உப்பு – தேவையான அளவு

அரைக்க:

 பச்சை மிளகாய் – 3
 புதினா – 20 இலைகள்
 பூண்டு – 4 பல்
 இஞ்சி – சிறிதளவு
 சோம்பு – ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

பாஸ்மதி அரிசியை நன்றாகக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும். சோயா சங்க்ஸை 10 நிமிடம் கொதிக்கும் வெந்நீரில் போட்டு பிறகு குளிர்ந்த நீரில் இரண்டு முறை கழுவி, தண்ணீர் இல்லாமல் பிழிந்தெடுத்து வைக்கவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பிரஷர் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்கி, இதில் முந்திரியைச் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளித்து நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

இதில் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து பச்சை வாடை போக நன்கு வதக்கவும். இவற்றுடன் சோயா சங்க்ஸ் மற்றும் அரிசியைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் தேங்காய்ப்பால், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் கலவையை நன்கு கிளறி, குக்கரை மூடி இரண்டு விசில் விடவும். குக்கரில் உள்ள பிரஷர் அடங்கியவுடன் குக்கரைத் திறந்து ஒரு ஃபோர்க்கால் புலாவை கிளறி, வறுத்து வைத்துள்ள முந்திரியைச் சேர்த்து தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

குறிப்பு:

புலாவ் வெந்தவுடன் அதை வேறு ஒரு பாத்திரத்தில் கொட்டி ஃபோர்க்கால் கிளறி எடுத்து வைக்கவும். கரண்டியால் கிளறினால், புலாவ் குழைந்து விடும் அல்லது உடைந்து விடும்.

சோயா பொடிமாஸ்!

சோயா கோலா உருண்டை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *