கிச்சன் கீர்த்தனா: சோயா மொச்சை கிரேவி

Published On:

| By christopher

சோயா பீன்ஸில் மற்ற பருப்பு வகைகளைக் காட்டிலும் எல்லாவிதமான ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளது. குறிப்பாக புரதம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற சத்துகள் அதிகம் இருப்பதால் சைவ உணவு உண்பவர்களுக்கு சோயா சிறந்ததாக விளங்குகிறது. சோயாவில் மொச்சை சேர்த்து இந்த கிரேவி செய்து வீக் எண்டை கொண்டாடலாம்.

என்ன தேவை?

சோயா – 100 கிராம்
மொச்சை – 100 கிராம்
தக்காளி – 2
காய்ந்த மிளகாய் – 2
தனியா (மல்லி) – ஒரு டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 2 பல்
தயிர் – 2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 2
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சோயா, மொச்சையைக் குக்கரில் வைத்து, தண்ணீர் விட்டு, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும் தக்காளி, காய்ந்த மிளகாய், தனியா, இஞ்சி, பூண்டு பல், சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கிளறி, நன்கு வதங்கியதும் வேக வைத்த மொச்சை, சோயாவைப் போட்டுக் கொதிக்க வைத்து, தயிர் விட்டு இறக்கவும். சுவையான சோயா மொச்சை கிரேவி ரெடி.

வாழைத்தண்டு புளிப்பச்சடி

வாழைப்பூ பொரியல்