கிச்சன் கீர்த்தனா: சோயா கீமா பராத்தா!

தமிழகம்

வீக் எண்ட் நாட்களில் விதவிதமாக சாப்பிட நினைப்பவர்கள் பலருண்டு. நான் – வெஜ் சாப்பிடுபவர்கள் வார இறுதி நாளான  இந்த சனிக்கிழமையில் மட்டனை நினைத்துக்கொண்டே இந்த சோயா கீமா பராத்தா சாப்பிடுவது, ஒரு மாறுதலான, ஆறுதலான விஷயமாக இருக்கும். 

என்ன தேவை?

சோயா சங்க்ஸ் பெரியது – 20
பெரிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
சீரகத்தூள்- அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
சோம்புத்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சப்பாத்தி செய்ய:
கோதுமை மாவு – ஒரு கப்
தண்ணீர் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கோதுமை மாவை தண்ணீர், உப்பு சேர்த்துப் பிசைந்து வைக்கவும். சோயா சங்க்ஸை 10 நிமிடம் வெந்நீரில் போட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் இரண்டு முறை கழுவி மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்புத்தூள், வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கியதும், இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போக நன்கு வதக்கவும். இத்துடன் அரைத்து வைத்துள்ள சோயா, மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

வாணலியை ஒரு தட்டால் மூடி குறைந்த தீயில் சோயாவை நன்கு வேக விடவும். சோயா வெந்தவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் கீமா ரெடி. சப்பாத்தி மாவை சிறிய சப்பாத்திகளாகத் தேய்த்து நடுவில் ரெடி செய்த கீமாவை வைக்கவும்.

சப்பாத்தியை மூடி உருண்டையாக உருட்டவும். பின் இந்த உருண்டையை சப்பாத்தியாகத் தேய்க்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கி, சிறிது எண்ணெய் ஊற்றி திரட்டிய சப்பாத்தியை இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். தயிர் பச்சடி, ஊறுகாயுடன் சோயா கீமா பராத்தாவைப் பரிமாறவும்.

சோயா புலாவ்!

சோயா பொடிமாஸ்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *