உலகத்தின் பல பகுதிகளிலும் பலவிதமான உணவு வகைகள் இருந்தாலும் வீட்டில் சட்டென்று செய்யக்கூடிய உணவுகளுக்குத் தனிச்சிறப்பு உண்டு. பள்ளியில் இருந்து திரும்பும் உங்கள் வீட்டுக் குழந்தைகளை குஷியாக்க இந்த சோயா தோசை பெஸ்ட் சாய்ஸாக அமையும். நீரிழிவாளர்களுக்கும் ஏற்றது.
என்ன தேவை?
அரிசி மாவு – முக்கால் கப்
உளுந்த மாவு – கால் கப்
சோயா மாவு – கால் கப்
ஃப்ரூட் சால்ட் (கடைகளில் கிடைக்கும்) – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
எல்லா மாவையும் ஒரு கப் நீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். 30 நிமிடங்கள் ஊற விடவும். தோசை வார்ப்பதற்கு முன் ஃப்ரூட் சால்ட்டை தூவி மாவை லேசாக கலந்து கொள்ளவும். தோசையாக வார்த்து, எண்ணெய் தடவி வேகவிடவும். சூடாகப் பரிமாறவும்.
கிச்சன் கீர்த்தனா: சோயா கோலா உருண்டை