கிச்சன் கீர்த்தனா: சோயா 65!

தமிழகம்

சோயா உணவுகள் எல்லோருக்கும் ஏற்றதா என்கிற வாதம் ஒருபுறம் இருக்க… “சோயா உணவுகள் எல்லோருக்கும் ஏற்றவைதான். இரண்டு வயதுக்குப் பிறகிலிருந்து எல்லோருக்கும் சோயா உணவுகள் கொடுக்கலாம்.

தைராய்டு குறைவாகச் சுரக்கும் ஹைப்போ தைராய்டு பாதிப்பு உள்ளவர்களில் சிலருக்கு மட்டும் சோயா உணவுகள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம்.

ஆனால், அதுவும் தினமும் 30 முதல் 40 கிராம் அளவுக்கு தொடர்ந்து பல மாதங்களுக்கு எடுக்கும்போதுதான் ஏற்றுக்கொள்ளாமல் போகும்” என்கிறார்கள் ஊட்டச்சத்துகள் ஆலோசகர்கள்.

அப்படிப்பட்ட சோயா சங்க்ஸில் இந்த சோயா 65 செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம்.

என்ன தேவை?

சோயா சங்க்ஸ் (மீல் மேக்கர்)  – 50 கிராம் (25 பெரிய பீஸ்)
கார்ன்ஃப்ளார் – 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
தயிர் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – 2 இலைகள்
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

சோயா சங்க்ஸை கொதிக்கும் வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்துப் பிழிந்தெடுத்து வைத்துக்கொள்ளவும். பெரியதாக இருந்தால், இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். தேவையானவற்றில் எண்ணெய், சோயா சங்க்ஸ், கறிவேப்பிலை தவிர மற்ற பொருட்களை எல்லாம் ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

இதில் சோயா சங்க்ஸை சேர்த்துக் கிளறி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற விடவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, இதில் சோயா சங்க்ஸை போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

அதே எண்ணெயில் கறிவேப்பிலையைப் பொரித்தெடுக்கவும். பொரித்த சோயா 65 மேல் கறிவேப்பிலையைத் தூவி தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

எடை குறைப்பு முயற்சியில் தோற்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பனீர் பரா பப்பட்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *