தாம்பரம் – ராமேஸ்வரம் தினசரி ரயில், கோவை – தாம்பரம் இடையே வாராந்திர ரயில் உட்பட 10 புதிய ரயில்களை இயக்க இந்திய ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் பல ஆண்டுகளாக நடந்து வந்த இரட்டை ரயில் பாதை மற்றும் அகலப்பாதை திட்டங்கள் முடிவடைந்துள்ளன.
இதனால், தெற்கு ரயில்வே அதிகாரிகள் குழுவினர் ரயில் பயணிகளின் தேவை குறித்து பல மாதங்களாக ஆய்வு செய்து அறிக்கையை தயாரித்துள்ளனர்.
அதன்படி, தாம்பரம் – ராமேஸ்வரம், கோவை – தாம்பரம் உட்பட பல்வேறு வழித்தடங்களில், 10 புதிய ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்திற்கு, தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.
தெற்கு ரயில்வே பரிந்துரையில், தாம்பரத்தில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்திற்கு தினமும் ரயில் சேவை, கோவையில் இருந்து பொள்ளாச்சி, திண்டுக்கல், திருச்சி வழியாக தாம்பரத்திற்கு வாராந்திர ரயில் என 10 புதிய ரயில்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே பரிந்துரையில், தாம்பரத்தில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்திற்கு தினமும் ரயில் சேவை
கோவையில் இருந்து பொள்ளாச்சி, திண்டுக்கல், திருச்சி வழியாக தாம்பரத்திற்கு வாராந்திர ரயில் சேவை
தாம்பரம் – பீஹார் மாநிலம் தனபூர் இடையே தினசரி விரைவு ரயில் சேவை
தாம்பரம் – மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சி இடையே வாராந்திர விரைவு ரயில் சேவை
திருநெல்வேலி – ஜோத்பூர் வாராந்திர விரைவு ரயில் சேவை
கொச்சுவேலி — கவுஹாத்தி வாராந்திர விரைவு ரயில் சேவை
கொச்சுவேலி – பெங்களூரு வாரம் 3 முறை ரயில் சேவை உட்பட 10 ரயில்களை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே கூறுகையில், “ரயில் திட்டப் பணிகள் முடிந்துள்ள வழித்தடங்கள் மற்றும் பயணிகளின் தேவை உள்ள வழித்தடங்களில் ஆய்வு செய்து, கூடுதல் ரயில்கள் இயக்க பரிந்துரைப்பது வழக்கமான நடவடிக்கை.
இந்த அறிக்கையை ரயில்வே வாரியம் ஆய்வு செய்து, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். பரிந்துரை என்பது ரயில்கள் இயக்குவது குறித்து ஆரம்ப கட்ட பணிதான்; இறுதி முடிவை ரயில்வே வாரியமே அறிவிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: மல்ட்டி ஃப்ரூட் சாலட்
வெறும் பானைக்குள்ள ரெய்டு : அப்டேட் குமாரு
”வாழ்நாளில் அவரை மறக்கவே முடியாது” : ஆர்.எம்.வீ குறித்து ரஜினி, கமல் உருக்கம்!