changes in south tamilnadu trains

தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவை: தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

தமிழகம்

கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் சில மாற்றங்களை செய்துள்ளது தெற்கு ரயில்வே. changes in south tamilnadu trains

இது குறித்து, தெற்கு ரயில்வே இன்று (டிசம்பர் 19) வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் காரணமாக ரயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

1. இன்றும் நாளையும் புனலூரில் இருந்து புறப்படும் ரயில் எண். 16730 புனலூர் – மதுரை எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

2. இன்று மதுரையில் இருந்து புறப்படும் ரயில் எண். 16729 மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் புறப்படும் இடத்தில் மாற்றம்

1. திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் எண். 12632 திருநெல்வேலி – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் இன்று மதுரையில் இருந்து புறப்படும்.

2. திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் எண். 16846 திருநெல்வேலி – ஈரோடு எக்ஸ்பிரஸ் நாளை திண்டுக்கல்லில் இருந்து புறப்படும்.

3. திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் எண். 16791 திருநெல்வேலி – பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் இன்று தென்காசியில் இருந்து இயக்கப்படும்.

4. திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் எண். 20923 திருநெல்வேலி – காந்திதாம் பிஜி ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் டிசம்பர் 21 ஆம் தேதி திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும்.

5. தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில் எண். 16235 தூத்துக்குடி – மைசூரு எக்ஸ்பிரஸ் இன்று மதுரையில் இருந்து இயக்கப்படும்.

6. தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில் எண். 12694 தூத்துக்குடி – சென்னை எழும்பூர் பேர்ல் சிட்டி எக்ஸ்பிரஸ் இன்று மதுரையில் இருந்து புறப்படும்.

ரயில் நிறுத்துமிடத்தில் மாற்றம்

1. ஈரோட்டில் இருந்து இன்று புறப்படும் ரயில் எண். 16845 ஈரோடு – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் திண்டுக்கல்லில் நின்றுவிடும்.

2. நேற்று பயணத்தை தொடங்கிய ரயில் எண். 20924 காந்திதாம் பிஜி – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.

திசை திருப்பப்பட்ட ரயில்

நேற்று புறப்பட்ட ரயில் எண். 12642 ஹஸ்ரத் நிஜாமுதீன் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் திருச்சிராப்பள்ளி, கரூர், ஈரோடு, போத்தனூர், எர்ணாகுளம், கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் வழியாக இயக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

ஃபைட்கிளப் வசூல் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சண்டக்கோழி விஜய் நடிக்க வேண்டிய படம்: லிங்குசாமி

IPL2024: சென்னையுடன் மீண்டுமொரு உரசல்… ரூ. 20.50 கோடி கொடுத்து கேப்டனையும் வாங்கியது ஹைதராபாத்!

changes in south tamilnadu trains

+1
0
+1
0
+1
3
+1
2
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *