Southern Railway action order to deal with crowding!

தவிக்கும் பயணிகள்… ராகுல் குற்றச்சாட்டு : தெற்கு ரயில்வே உத்தரவு!

தமிழகம்

ரயில் பயணிகளின் குமுறலை அடுத்து ‘மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாக மாறியுள்ளது’ என ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில் ரயில்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வ இன்று (ஏப்ரல் 21) அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பயணிகள் சேவை நிறுவனமாக இந்திய ரயில்வே உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் லட்சக்கணக்கான பயணிகளை சுமந்து கொண்டு நாட்டின் பல்வேறு மூலைகளுக்கும் அழைத்து செல்கிறது.

ரயில்வே பயணிகள் அதிருப்தி!

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே சேவை மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்து வருகிறது.

ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இரண்டாம் வகுப்பு பெட்டிகளை குறைப்பதும், கூடுதலாக முன்பதிவு பெட்டிகள் இணைக்கப்படாததும், வந்தே பாரத் போன்ற முன்பதிவு பெட்டிகள் கொண்ட ப்ரீமியம் ரயில்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதும் சாமானிய பயணிகள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Photo Of Crowd, Chaos Inside Train Coach Goes Viral, Railways Responds

இதனால் விடுமுறை நாட்களில் சாமானிய மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் இன்றி ஏசி பெட்டிகளிலும், கழிவறைகளிலும் இருந்து பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் முன்பதிவு செய்தவர்கள் கூட நெரிசலோடு பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சமீபத்தில் மக்களவைத் தேர்தலுக்கு ஓட்டு போடுவதற்காக ரயில் பயணத்தை மேற்கொண்ட பயணிகளின் பரிதாப நிலைமை சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் பலரும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனை!

இந்த நிலையில், காங்கிரஸ் எம்,பி. ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாக மாறியுள்ளது.

சாதாரண ரயிலில் பொதுப் பெட்டி எண்ணிக்கையை குறைத்து எலைட் ரயில்களை மட்டுமே மோடி அரசு ஊக்குவிக்கிறது.

எலைட் ரயில்களை ஊக்குவிக்கும் மோடி அரசால் அனைத்து பயணிகளும் துன்புறுத்தப்படுகிறார்கள்.

முன்பதிவு செய்த டிக்கெட்டுகளைப் பெற்றும் இருக்கைகளில் மக்கள் வசதியாக உட்கார முடியவில்லை. சாமானியர்கள் தரையில் அமர்ந்தும் கழிப்பறையில் பதுங்கியும் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது

சாமானியர்களின் பயணத்தைக் காப்பாற்ற ரயில்வே துறையை அழிக்கும் மோடி அரசை அகற்ற வேண்டும்” என்று ராகுல் தெரிவித்திருந்தார்.

தெற்கு ரயில்வே உத்தரவு!

இந்த நிலையில் ரயில்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே தற்போது அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திருச்சி உள்ளிட்ட ரயில்வே கோட்ட அலுவலர்களுக்கு  அனுப்பியுள்ள உத்தரவில் “பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து, கூடுதலாக ரயில்களை இயக்கவும், கூடுதல் ரயில் பெட்டிகளை இணைக்கவும் வேண்டும்.

மேலும் கூட்ட நெரிசலால் ரயில்களை நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றிவிடும் நேரத்தை அதிகரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

KKRvsRCB : ஸ்ரேயாஸ் அரைசதம்… பெங்களூரு அணிக்கு இமாலய இலக்கு!

உதயசூரியன் நாடு : அரிகாதோ.. சயோனரா..

தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவானதாக அறிவிப்பு!

+1
0
+1
2
+1
0
+1
7
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *