இன்று (மார்ச் 22) தமிழ் நாட்டில் மிதமான மழை பெய்யக்கூடும் என, வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கைளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்று தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை (மார்ச் 23) தொடங்கி மார்ச் 28-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ‘குளோஸ்’ செய்த சீரியல் நடிகை… பின்னணி என்ன?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)
நாலுமுக்கு (திருநெல்வேலி) 4 சென்டிமீட்டர், புலிப்பட்டி (மதுரை), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), நாகுடி (புதுக்கோட்டை), பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி) தலா 2 சென்டிமீட்டர்.
போடிநாயக்கனூர் (தேனி), நாங்குனேரி (திருநெல்வேலி), மண்டபம் (ராமநாதபுரம்), காரைக்குடி (சிவகங்கை), தொண்டி (ராமநாதபுரம்), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), சேர்வலாறு அணை (திருநெல்வேலி) தலா 1 சென்டிமீட்டர்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை”, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
REBEL: எப்படி இருக்கிறது?… ரசிகர்கள் விமர்சனம்!
தென் தமிழக மாவட்டங்கள்: ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை.
வட தமிழக மாவட்டங்கள்: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, வேலூர்.
திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஏ.ஆர். ரகுமான் பாட… டைகர் ஷெராஃப் ஆட… : தொடங்குகிறது ஐபிஎல் 2024 திருவிழா!
பிற்பகல் 3.30 மணிக்கு ’அமைச்சர்’ ஆக பதவி ஏற்கிறார் பொன்முடி
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000… ’நீட்’டுக்கு மாற்றுத் தேர்வு : அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!