சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் : மீண்டும் பெறுவது எப்படி?

தமிழகம்

தென்மாவட்டங்களில் மழையால் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களிலேயே சான்றிதழ்களைப் பெறலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த மழையால்  மாணவர்கள் பலர் சான்றிதழ்களை இழந்துள்ளனர். இவர்கள் மீண்டும் சான்றிதழ்களைப் பெற அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில். “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், “மிக் ஜாம்” புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பினால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை இழந்த மாணவ மாணவிகள் தங்கள் சான்றிதழ்களின் நகல்களைக் கட்டணமின்றி பெறுவதற்கு ஏதுவாக www.mycertificates.in என்ற இணையதளம் உயர்கல்வி துறையால் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ / மாணவியர்களும் தாங்கள் இழந்த சான்றிதழ்களின் நகல்களைப் பெற அச்சான்றிதழ்கள் பற்றிய விவரங்களை மேற்கண்ட இணையதளம் வாயிலாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

மாணவ /மாணவிகள் மேற்கண்ட இணையதளம் வாயிலாகச் சான்றிதழ்களின் விபரங்களைப் பதிவு செய்தபின் அவர்களது மின்னஞ்சலுக்கு ஒப்புகை (Acknowledgement) அனுப்பப்படும்.

அவ்வாறு பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திடமிருந்து பெறப்பட்டு, மாணவ / மாணவியர்களுக்கு, அவர்கள், எந்த மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தார்களோ, அதே மாவட்டத்திலேயே, அவர்களுக்கு வழங்கப்படும்.அதாவது, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தவர்களுக்குத் திருநெல்வேலி மாவட்டத்திலேயே வழங்கப்படும். கட்டணமின்றி சான்றிதழ்களின் நகல்களை பெறலாம்.

மேலும், இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு தெளிவுபெற, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் செயல்படும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

கௌதமி சொத்து அபகரிப்பு வழக்கு : பாஜக நிர்வாகி வாக்குமூலம்!

லியோ முதல்நாள் வசூலை முறியடித்த சலார்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *