இன்று (பிப்ரவரி 23) தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் ஆகிய இடங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டின் இதர பகுதிகள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை (பிப்ரவரி 24) மற்றும் நாளை மறுநாள் (பிப்ரவரி 25) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை,” என தெரிவித்துள்ளது.
அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருப்பதால், வெயிலின் தாக்கம் சற்று குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IPL: 2008-2023 வரை…வின்னர், ரன்னர்கள் பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு?
கொடநாடு பங்களாவில் ஆய்வு செய்ய உத்தரவு!