மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்த அப்பள வியாபாரியை மூத்த பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் தத்தனரி பகுதியில் அப்பளம், வற்றல் வியாபாரம் செய்து வருபவர் ராஜேந்திரன் என்ற 86 வயது முதியவர்.
கடந்த 2018ல் மாநகராட்சி திரு.வி.க.பள்ளியில் 10 புதிய வகுப்பறைகள், இறைவணக்க கூடம் உள்ளிட்டவைகளை ரூ.1.10 கோடி ரூபாய் நிதியில் கட்டிக்கொடுத்துள்ளார்.
அண்மையில் கைலாசபுரம் மாநகராட்சி பள்ளியில் ரூ.71.45 லட்சம் செலவில் 4 வகுப்பறைகள், கழிப்பறை, உணவுக்கூடம் ஆகியவற்றை கட்டிக்கொடுத்துள்ளார்.
இதனையறிந்த பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா இன்று அப்பள கம்பெனிக்கு நேரில் வந்து ராஜேந்திரனை கட்டித்தழுவி, பொன்னாடை போர்த்தி, திருக்குறள் நூல் அளித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
அப்போது சாலமன் பாப்பையா கூறுகையில், “அண்மையில் நான் பயின்ற மாநகராட்சி பள்ளிக்கு நானும் ரூ.20 லட்சம் நிதி அளித்தேன். என்னைப் பொறுத்தவரை நான் அந்தப்பள்ளியில் படித்தேன். அதனால் கொடுத்தேன்.
ஆனால், ராஜேந்திரன் வெறும் 5ம் வகுப்பு மட்டும் படித்து விட்டு இவ்வளவு நிதியை பள்ளிகளுக்கு கொடுத்துள்ளார். அது போற்றத்தக்க செயல் என நினைத்தேன். இன்று நேரில் வந்து அவரை வாழ்த்தினேன். எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ராமலிங்கம்
HACT2023: ஜப்பானை சரித்து… இந்தியாவை தாண்டி… மலேசியா முதலிடம்!
மணிப்பூர் விவகாரம்: மூன்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைப்பு!