அரசு மருத்துவமனைக்குள் புகுந்த பாம்பு: நோயாளிகளின் நிலை?

தமிழகம்

சமீப நாட்களாக அரசு மருத்துவமனைகள் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், இன்று கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பாம்பு புகுந்தது நோயாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏழை, எளிய, சாமானிய மக்கள் சிகிச்சை பெறும் இடமாக அரசு மருத்துவமனைகள் உள்ளன. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையிலும் நாளொன்றுக்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு சுமார் 800 படுக்கைகள் உள்ளன. இதிலும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்குள்ள புதிய கட்டடத்தில் ஏர்கண்டிஷனர் வசதியுடன் ஐசியு பிரிவு செயல்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் பழைய கட்டடத்திற்கு ஐசியு பிரிவு மாற்றப்பட்டிருக்கிறது.

“இதற்கு சில மருத்துவர்களின் சுயநலம்தான் காரணம் என்றும் பழைய கட்டடத்தில் பாதுகாப்பு வசதிகள் இல்லை” என்றும் அங்கு பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள் கூறுகின்றனர்.

மருத்துவமனையின் வடக்கு பகுதியில் அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, தெற்கு பகுதியில் செவிலியர் பள்ளி மற்றும் மாணவிகள் தங்கும் விடுதி, நடுப்பகுதியில் தாய் வார்டு (விபத்துக்கான வார்டு), ஆபரேஷன் தியேட்டர் ஆகியவை உள்ளன. அதன் பகுதியில் தான் ஐசியு வார்டு மாற்றப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.

அரசு செவிலியர் பள்ளி அருகில் குளம் குட்டையுடன் புதர்களும் உள்ளது. இந்த பகுதியிலிருந்து அடிக்கடி மருத்துவமனைக்குள் பாம்பு புகுந்துவிடுவதாகவும், இதனால் தினசரி அச்சத்துடனே இருப்பதாகவும் அங்கு பணிபுரிபவர்கள் கூறுகின்றனர். நோயாளிகளும் அச்சத்துடனே மருத்துவமனைக்கு வந்து செல்வதாக புலம்புகின்றனர்.

இதுபோன்ற சூழலில் மீண்டும் இன்று நல்ல பாம்பு புகுந்துள்ளது. மாலை சுமார் 3.00 மணியளவில் ஐசியு வார்டு அமைந்திருக்கும் கட்டடத்தில் நல்ல பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது.

இதைக் கண்ட நோயாளிகளும், பணியாளர்களும் தெறித்து ஓடியுள்ளனர். தொடர்ந்து பாம்பு பிடிப்பவருக்கும் பணியாளார்கள் தகவல் தெரிவித்தனர். பாம்பு பிடிப்பவர் வந்து அந்த பாம்பை பிடித்து சென்ற பிறகுதான் அங்கு இயல்பு நிலை வந்துள்ளது.

“பாம்பு புகுந்த பகுதியில் தான் தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் அவ்வளவு பெரிய பாம்பை கண்டதும் ஹார்ட் பேஷன்ட்களுக்கு ஹார்ட் பீட் எல்லாம் அதிகரித்துவிட்டது, பிளட் பிரஷர் பேஷன்ட்களுக்கு பிரஷரும் எகிறிவிட்டது” என்கின்றனர் மருத்துவர்கள்.

வணங்காமுடி

இளசா பழசா புலம்பும் ரஜினி

ஒரே ஓவரில் 7 சிக்சர் : உலக சாதனை படைத்த ருதுராஜ் கெய்வாட்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *