உணவகங்களில் புகை பிடிக்கும் அறைக்கு தடை விதித்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
உணவுக்கூடங்களில் புகை பிடிக்கும் அறைக்கு தடை விதிப்பது தொடர்பாக தமிழக அரசு சார்பில் 2022-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் உணவகங்களில் புகை பிடிக்கும் அறை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில், “2003-ஆம் ஆண்டு சிகெரெட்டுகள் மற்றும் பிற புகையிலை தயாரிப்புகள் சட்டத்தை தமிழகத்திற்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.
அதன்படி மதுக்கூடங்கள் அல்லாத உணவுக்கூடங்களின் எந்த இடத்திலும் புகைக்குழல் கூடம் எதனையும் திறக்கவோ அல்லது நடத்தவோ வாடிக்கையாளர்களுக்கு புகைக்குழல் வழங்கவோ தடை செய்யப்படுகிறது.
புகைக்குழல் கூடம் நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் காவல்துறையினர் எவரும் அங்கு பயன்படுத்தப்பட்ட பொருளை பறிமுதல் செய்யலாம். இதனை மீறி புகைக்குழல் கூடம் அமைத்தால் ஓர் ஆண்டுகள் முதல் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
I.N.D.I.A பெயரை பயன்படுத்த தடை கோரிய வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி: காவல்துறை அணிவகுப்பு!