மாணவர்களின் இலவசப் பயணத்துக்கு ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ்!

தமிழகம்

தமிழகத்தில் நடப்பாண்டில்  30 லட்சத்து 14,000 மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸை ஸ்மார்ட் கார்டாக வழங்குவதற்கான பணிகளை போக்குவரத்துத்துறை முன்னெடுத்து வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அக்னி வெயிலின் தாக்கத்தின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 7ஆம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள், அரசு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.யில் படிக்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் சுமார் 30 லட்சத்து 14,000 பேர் பயனடையலாம் எனக் கணக்கிட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும்
நடப்பாண்டில் இலவச பஸ் பாஸை ஸ்மார்ட் கார்டாக வழங்குவதற்கான பணிகளை முன்னெடுத்து வருவதாக போக்குவரத்துத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“எல்லா மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க திட்டமிட்டு இருக்கிறோம். கல்வி நிறுவனங்களிடம் இருந்து இலவச பாஸ் கோரிக்கையைப் பெற்ற பின்னரே பயனாளிகள் இறுதி எண்ணிக்கை தெரியவரும். போக்குவரத்து துறையின் தொழில்நுட்பக் கிளையான சாலை போக்குவரத்து நிறுவனம் மாணவர்களுக்கான பஸ் பயண அட்டைகளை வழங்கும் செயல்முறையை தொடங்கியுள்ளது. மேலும் ஸ்மார்ட் கார்டு அச்சிடுவதற்கான டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

வருகிற ஜூன் அல்லது ஜூலை மாத இறுதிக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ் வழங்கப்படும். 2022-23 ஆம் ஆண்டு இலவச பேருந்து பயணச் சீட்டுகளுக்கான இழப்பீடாக ரூ.1,300 கோடியை போக்குவரத்து கழகங்களுக்கு மாநில அரசு ஒதுக்கியுள்ளது. நடப்பாண்டில் இந்தத் தொகை ரூ.1,500 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்

ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

சிஎஸ்கே வெற்றி: முதல்வர் வாழ்த்து!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *