நான்கு நாட்களுக்கு பிறகு உயர்ந்த தங்கம், வெள்ளி விலை : இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் இன்று (ஜூலை 2) தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,520க்கு விற்பனையாகிறது.
கடந்த 4 நாட்களாக கூடாமல், குறையாமல் ஒரே விலையில் விற்பனையான தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.
நேற்று தங்கம் விலை கிராம் ரூ.6,685க்கும், ஒரு சவரன் ரூ.53,480க்கும் விற்பனையானது. இன்று (ஜூலை 2) தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.6,690க்கும், ஒரு சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.7.160க்கும், ஒரு சவரன் ரூ.57,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கடந்த ஜூன் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை கிராம் ரூ.94.50க்கும், ஒரு கிலோ ரூ.94,600க்கும் விற்பனையானது.
இதையடுத்து நேற்று (ஜூலை 1) ஒரு கிலோவிற்கு ரூ.200 உயர்ந்த வெள்ளி விலை ரூ.94,700க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்று வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.95.50க்கும், ஒரு கிலோ ரூ.800 உயர்ந்து ரூ.95,800க்கும் விற்பனையாகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விரக்தியில் குழந்தைப்போல் தேம்பி தேம்பி அழுத ரொனால்டோ: வீடியோ வைரல்!
ராமநாதபுரம் மீனவர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்!