கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவிக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளது. armstrong wife deaththreat
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் அவர் கட்டிக்கொண்டிருந்த புது வீட்டருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் இது வரை 18 பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
இந்த சம்பவத்திற்குப் பின் அவரது மனைவிக்குப் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் பொற்கொடிக்குக் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. சென்னை படூர் ஜெயராஜ் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற பெயரில் வந்த அந்தக் கடிதத்தில் அவரது மொத்தக் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக எழுதப்பட்டிருந்தது.
‘ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான எனது நண்பனை விடுவிக்க வேண்டும். இல்லை என்றால் குண்டு வீசி கொலை செய்துவிடுவோம். உங்கள் 4 வயது மகளையும் கடத்தி கொலை செய்துவிடுவோம். ஒழுங்காக எனது நண்பனை விடுவிக்க சொல்லுங்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கொலை மிரட்டல் கடிதம் குறித்து பொற்கொடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து அவரும் அவரது உறவினர்கள் வசிக்கும் அயனாவரம் குடியிருப்பிற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி வெளியில் செல்லும் போதும் அவருக்கு பாதுகாப்பு வழங்கவும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும் படூர் பகுதியை சேர்ந்த சதீஷை பிடித்தும் காவல்துறை விசாரித்து வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார்… 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார்… 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
ஆறாவது நாளாகத் தொடரும் மீட்புப்பணி… மீளும் வயநாடு