தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!

Published On:

| By Monisha

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகத் தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (ஆகஸ்ட் 28) அதிகாலை தனுஷ்கோடி தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ஒரு விசைப்படகை கைப்பற்றி அதிலிருந்த மீனவர்கள் நிஷாந்த் ஆண்டி, கருணாநிதி, உலகநாதன், சூசைவியாகுலம், ஜேசு ஆகிய 6 பேரைக் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

மேலும், மீனவர்களை இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த பிறகு தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது கைதாகியுள்ள 6 மீனவர்களையும் உடனடியாக மீட்டுத் தர வேண்டுமென மீனவர்களின் உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மோனிஷா

ஒரே மாதத்தில் இரண்டாவது முறை: தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel