உடல் பருமனைக் குறைக்க நினைப்பவர்கள் பாயசத்தை ஒதுக்குவார்கள். ஆனால் பாயசம் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த சிவப்பரிசி பாயசம் சாப்பிடலாம். இந்த சிவப்பரிசி பாயசம் கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவும். சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, பித்தப்பைக் கற்கள், ஆஸ்துமா போன்ற நோய்கள் வராமல் தடுக்கும்.
என்ன தேவை?
சிவப்பரிசி – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் – ஒரு கப்
நாட்டுச் சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
முந்திரி – 10
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
சிவப்பரிசியை வெறும் வாணலியில் மிதமான தீயில் வாசம் வரும் வரை வறுக்கவும். ஆறியதும், மிக்ஸியில் ரவை போல உடைக்கவும். வாணலியில் நெய்விட்டு முந்திரியைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி சிவப்பரிசி ரவையைச் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். நன்றாக வெந்ததும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கிளறி, அடுப்பை அணைக்கவும். வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
கிச்சன் கீர்த்தனா: பீட்ரூட் சூப்