நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97ஆவது பிறந்தநாளான இன்று (அக்டோபர் 1), அடையாறில் உள்ள சிவாஜி கணேசனின் உருவச்சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நடிகர் சிவாஜி கணேசன் அக்டோபர் 1, 1928-ஆம் ஆண்டு விழுப்புரத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் கணேசமூர்த்தி ஆகும்.
ஆரம்ப காலகட்டத்தில் மேடை நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார். முன்னாள் முதல்வர் அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகத்தில் சிவாஜியாக நடித்த அவரது நடிப்பைப் பார்த்த பெரியார் தான் சிவாஜி கணேசன் என்ற பெயரை வைத்தார்.
தனது அபாரமான நடிப்பு திறனால் தென்னகத்தின் மார்லன் பிரான்டோ என்று சிவாஜி கணேசன் அழைக்கப்பட்டார். 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் உடல் நலக்குறைவால், கடந்த 2001 ஆண்டு ஜூலை 21ஆம் தேதி சென்னையில் காலமானார்.
இந்த நிலையில், இன்று அவரது 97வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அடையாறில் இருக்கும் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்துக்குச் சென்றார்.
அங்கு சிவாஜி கணேசனின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது படத்திற்கு மலர்துவியும் மரியாதை செலுத்தினார்.
முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர் பாபு மற்றும் சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு, அவரது அண்ணன் ராம்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்டோரும் சிவாஜி கணேசனுக்கு மரியாதை செலுத்தினர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ரஜினி எப்படி இருக்கிறார்?: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு : காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
காந்தி மண்டபத்தில் மதுபாட்டில் : ஆளுநர் ரவி வருத்தம்!