விழா அரங்கை அசரடித்த என்ஜாயி எஞ்சாமி பாடல்!

தமிழகம்

ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் பாடகி தீ என்ஜாயி, எஞ்சாமி பாடலை பாடி அசத்தினார்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்று அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்

இதனைதொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளின் பெருமையை பறைசாற்றும் வகையில் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன. பாடகி தீ, நாட்டுப்புற பாடகி கிடாக்குழி மாரியம்மாள் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்தி அசத்தினர்.

என்ஜாயி, எஞ்சாமி பாடலை பாடகி தீ பாடி அசத்தினார்.

அல்லி மலர் கொடி அங்கதமே! ஒட்டார ஒட்டார சந்தனமே! முல்லை மலர்க்கொடி முத்தாரமே! எங்கூரு எங்கூரு குத்தாலமே! என பாடும் போது ஒரு நிமிடம் கிறங்கி தெளிந்தது செஸ் ஒலிம்பியாட் அரங்கம்!

பாடலாசிரியரும் பாடகருமான அறிவு எழுதிய இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். அறிவும் பாடகி தீயும் இணைந்து உருவாக்கிய “என்ஜாயி எஞ்சாமி” பாடல் இதுவரை யூட்யூபில் 42 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டிருக்கிறது.

சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்த என்ஜாயி, எஞ்சாமி பாடலை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பாடி அனைவரையும் அசரடித்தார்.

  • க.சீனிவாசன்
+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *