கலாஷேத்ரா : மனித உரிமை ஆணைய விசாரணை தொடங்கியது
கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் இன்று (ஏப்ரல் 12) விசாரணையை தொடங்கியுள்ளது.
சென்னை திருவான்மியூரில் மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் இயங்கி வரும் கலாஷேத்ரா கல்லூரியில் பணியாற்றும் 4 பேராசியர்கள் மீது அங்கு பயிலும் மாணவிகள் பாலியல் புகாரை எழுப்பினர்.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட கல்லூரி பேராசிரியர் ஹரி பத்மன் தாக்கல் செய்த ஜாமின் மனுவை நேற்று தள்ளுபடி செய்தது சைதாபேட்டை நீதிமன்றம்.
அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் மாநில மகளிர் ஆணையம் முதலில் விசாரணை நடத்தி வந்தது.
அதனைத்தொடர்ந்து மாநில மனித உரிமை ஆணையம் தலைவர் எஸ்.பி. மகேஷ்வரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று கலாஷேத்ரா நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் 2 மணி நேரம் கல்லூரி இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குநர் பத்மாவதி, முதல்வர் பகல ராம்தாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று பாலியல் புகார் அளித்த மாணவிகளிடம் விசாரணை நடத்துவதற்காக மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் கலாஷேத்ரா சென்றுள்ளனர்.
இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் வாக்குமூலம் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
பாஜக நிர்வாகி செல்வகுமார் கைது: அண்ணாமலை கண்டனம்!
வம்சம் – டைரி : அருள்நிதி படங்கள் எப்படி?