கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்த நிலையில் நெல்லையில் தற்போது பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை கொட்டித் தீர்த்தது.
இதனால் தென் மாவட்டங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் வரிசையில் நிற்கின்றனர். பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்கின்ற நிலையில் நெல்லையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சாலைகள் துண்டிப்பு, போக்குவரத்து நிறுத்தம் போன்ற காரணத்தால் டேங்கர் லாரி வர முடியாத சூழலால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் கையிருப்பு உள்ள எரிபொருட்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறோம் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த கர்ப்பிணி: ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
IPL2024: இந்த தமிழக வீரர் 10 கோடிக்கு மேல ஏலம் போவாரு… பிரபல வீரரின் கணிப்பு உண்மையாகுமா?