Ship Transportation Banned in Pamban Bridge

பாம்பன் பாலம் வழியாக கப்பல்கள் செல்ல தடை: என்ன காரணம்?

தமிழகம்

பாம்பன் ரயில் தூக்குப் பாலம் வழியாக கப்பல்கள், படகுகள் கடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காக்கிநாடா, விசாகப்பட்டினம், கொல்கத்தா உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் இருந்தும், தூத்துக்குடி, கன்னியாகுமரி தென்பகுதி துறைமுகங்களுக்கும், குஜராத், மும்பை, கோவா, கேரளா போன்ற மேற்கு பகுதி மாநில துறைமுகங்களுக்கு செல்லும் சிறிய ரக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாம்பன் ரயில், சாலை பாலங்கள் வழியாக வங்கக் கடலில் பயணித்து வருகின்றன.

இந்த கப்பல்கள் பாம்பன் பகுதியில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல்களின் உள்ள வானிலையை ஆராய்ந்த பின்னரே ரயில்வே தூக்குப் பாலத்தை கடக்க அனுமதிக்கப்படுகின்றன. இந்த நிலையில் புதிய பாம்பன் ரயில் பாலத்தின் நடுவே செங்குத்து தூக்குப் பாலத்தை நிறுவுவதற்கான பணிகள் துவங்கி உள்ளது.

இதற்காக பாலத்தின் நடுவே இரும்பு தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தூண்கள் பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தின் எதிரே அமைக்கப்படுகிறது. இதனால் பாம்பன் ரயில் தூக்குப் பாலம் வழியாக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கடந்து செல்வதற்கு தடை விதிப்பதாக ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பாம்பன் புதிய ரயில் பாதை பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு (2024 டிசம்பர்) இறுதிக்குள் பணிகளை முடித்து பாம்பன் புதிய ரயில் பாலம் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: கறிவேப்பிலைக் குழம்பு!

ஹெல்த் டிப்ஸ்: சிரிக்க தெரிந்தவர்தானே நீங்கள்? ஸ்மைல் ப்ளீஸ்!

IPL 2024 Final: சேப்பாக்கம் மைதானம் யாருக்கு சாதகம் ? ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்!

share market ’பங்காளி’கள் கவனத்துக்கு… லாப திசையில் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்!

+1
0
+1
0
+1
2
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *