Shekhar Reddy announcement

மூன்றாவது முறையாக தேவஸ்தான குழு தலைவர் : தமிழக பக்தர்களுக்கு சேகர் ரெட்டி வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகம்

திருப்பதி  தேவஸ்தானத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆலோசனை குழு தலைவராக சேகர் ரெட்டி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே  தொண்டாந்துளசி கிராமத்தில் பிறந்த பிரபல தொழிலதிபரான சேகர் ரெட்டி திருப்பதி தேவஸ்தான போர்டில் அழைப்பாளராக பதவி வகித்தார். தொடர்ந்து 2019ஆம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆலோசனை குழு தலைவராக ஆந்திர அரசு நியமித்தது.

இந்த பதவி என்பது இரண்டு ஆண்டுகால பதவியாகும். இந்நிலையில் 2021ஆம் ஆண்டு மீண்டும் தமிழ்நாடு, புதுச்சேரி ஆலோசனை குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் நியமித்துள்ளது ஆந்திர அரசு. இதற்கான உத்தரவு நகலை திருப்பதியில்  தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி, சேகர் ரெட்டியிடம் வழங்கினார். திருப்பதி அறங்காவலர் குழு சிறப்பு அழைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் திருப்பதி தேவஸ்தான போர்டில் இடம் பெற்ற பிறகு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில்  கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கன்னியாகுமரியில்  ‘கடல் திருப்பதி’ என்று அழைக்கப்படும் கோயில் கட்டி முடிக்கப்பட்டது. திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் போல இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கோயில்கள் கட்ட திட்டமிடப்பட்டன. அதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு இந்த கோயில் கட்டி முடிக்கப்பட்டது.

சென்னை தி.நகரில்  திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டு இந்த ஆண்டு மார்ச் மாதம் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. திருப்பதி கோயில் அடிவாரமான அலிபிரியில் 16 கோடி ரூபாய் மதிப்பில் கோ மந்திர் எனப்படும் பசுவுக்கான சிறப்பு கோயில் கட்டப்பட்டுள்ளது.  4 ஏக்கர் பரப்பளவில் பொதுமக்கள் தியானக் கூடம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, குடிநீர் உட்பட அனைத்து வசதிகளும் இந்த வளாகத்தில் செய்யப்பட்டுள்ளன.

தனது உபயமாக இக்கோயிலை சேகர் ரெட்டி கட்டித் தந்துள்ளார். கோயிலுக்கான பராமரிப்புச் செலவையும் அவரே ஏற்றுக்கொண்டுள்ளார்.  தினமும் 40 ஆயிரம் பேர் அங்கு தரிசனம் செய்த பின்னர் திருமலைக்கு சென்று தரிசனம் செய்கின்றனர்.

தற்போது தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் 48 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் புதுப்பிக்கப்படவுள்ளது.இவ்வாறு அவர் ஏராளமான கோயில் பணிகளை செய்திருக்கும் நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒப்புதலுடன் செப்டம்பர் 5ஆம் தேதி  நடைபெற்ற அறங்காவலர்கள் குழு கூட்டத்தில் சேகர் ரெட்டி மூன்றாவது முறையாக, தமிழ்நாடு புதுச்சேரி ஆலோசனை குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சேகர் ரெட்டி செய்தியாளார்களிடம் கூறுகையில், “ விரைவில் வேலூர், உளுந்தூர் பேட்டையில் பெருமாள் கோயில் கட்டும் பணிகள் தொடங்கும். தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதிகள் கட்டும் பணிகளும் தொடங்கப்படும்.

திருப்பதி திருமலைக் குழுவுக்கு தேவையான உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.என்னை மூன்றாவது முறையாக தமிழ்நாடு, புதுச்சேரி ஆலோசனை குழு தலைவராக நியமித்த ஆந்திர முதல்வருக்கு நன்றி “ என்று கூறியுள்ளார்.

பிரியா

சனாதனத்தை ஒழிக்க திமுக என்ன செய்தது?: சீமான்

திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் எப்போது?

குறுவை சாகுபடி பாதிப்பு: முதல்வர் நாளை ஆலோசனை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *