கிச்சன் கீர்த்தனா: சுறா மீன் புட்டு!
சுறா மீனுக்கு ‘பால் பெருக்கி’ என்கிற ஒரு சிறப்பு பெயரும் உண்டு. கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிகச் சிறந்த உணவு. சுவையான இந்த சுறா மீன் புட்டை வீட்டிலுள்ள அனைவரும் ருசிக்க இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
சுறா மீன் – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 20
பூண்டு – 10
மஞ்சள்தூள் – சிறிதளவு
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சுறா மீன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, மீன் துண்டுகளைச் சேர்த்து சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். வெந்தபின் மீன் துண்டுகளை தனியே எடுத்து மீன் முள்ளினை நீக்கி விட்டு அதன் தசைப் பகுதியை உதிர்த்து தனியாக வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு (தட்டியது) பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், தேங்காய்த்துருவல் மற்றும் உப்பு சேர்த்து ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும். இத்துடன் உதிர்த்து வைத்துள்ள மீனைச் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடம் வரை நன்கு கிளறிப் பரிமாறவும்.
கிச்சன் கீர்த்தனா: எவ்வளவு சாப்பிட்டாலும் சிலருக்கு எடை ஏறாதது ஏன்?
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் லட்டு!