மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி தாளாளர் கைது!

தமிழகம்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த பள்ளித் தாளாளர் கைதுசெய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் இ.பி. காலனி பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியின் தாளாளரான வினோத் ப்ளஸ் 2 படிக்கும் 2 மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து அப்பள்ளி மாணவிகள், பள்ளி தாளாளர் வினோத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று (நவம்பர் 25) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர், ஆவடி தாசில்தார் உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த விவகாரத்தால் அப்பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜெ.பிரகாஷ்

கால்பந்து உலகக்கோப்பை: கானாவை வீழ்த்திய போர்ச்சுகல்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.