வால்பாறையில் அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்காலிக பேராசிரியர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரியில் அரசு மகளிர் தங்கும் விடுதியில் வெளியூர் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 30-ம் தேதி விழுப்புணர்வு நிகழ்ச்சிக்காக தேசிய மகளிர் ஆணையம் ஒருங்கிணைந்த சேவை மையம் அலுவலர் கிருஷ்ணவேணி தலைமையில் வந்த மாணவிகள் 7 பேர், கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் சிலர் எங்களை தொட்டு பேசுதல், ஆபாசமாக பேசுதல், அலைபேசிக்கு தவறான தகவல்களை அனுப்புதல் போன்ற செயலில் ஈடுபடுவதால் தங்களால் படிக்க இயலவில்லை. நாங்கள் ஊருக்கே செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வால்பாறை காவல் நிலையத்தில் ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலர் கிருஷ்ணவேணி தலைமையில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வால்பாறையில் மகளிர் காவல் நிலையம் இல்லாததால் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையில் வால்பாறை கலைக்கல்லூரி மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளில் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் தற்காலிக பேராசிரியர்கள் இரண்டு பேர் மற்றும் ஆய்வுக்கூட உதவியாளர் ஒருவர், என்சிசி பயிற்சியாளர் ஒருவர் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தற்காலிக பேராசிரியர்கள் இரண்டு பேர் உட்பட நான்கு பேர் மீதும் பாலியல் தொல்லை குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள் : ஸ்டாலின் சிகாகோ பயணம் முதல் ஆவணி திருவிழா வரை!
உள் ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்பும், தலித் அரசியலும், பொது சமூகமும்
கிச்சன் கீர்த்தனா: தாமரை விதை கீர்!
பியூட்டி டிப்ஸ்: எவ்வளவு சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாகவே இருப்பது இதனால்தான்!