சென்னையில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரி மெயின் ரோடு பள்ளி பகுதியில் தனியார் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப் பள்ளியில் மாதவரம் பச்சையப்பன் கார்டன் 1வது தெருவை சேர்ந்த பிரேம் ஆனந்த் 46 என்ற நபர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் கொடுங்கையூரைச் சேர்ந்த 12 வயது சிறுமிகள் இருவர் ஆசிரியரின் வீட்டிற்கு சென்று படித்து வருகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன் ஆசிரியர் தவறான இடங்களில் கை வைத்து கிள்ளுவதாகவும் அடிப்பதாகவும் இந்த சிறுமிகள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் எம் கே பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நசீமா இது குறித்து விசாரணை மேற்கொண்டார் .
மேலும் குழந்தைகள் பாதுகாப்புக்குழு உறுப்பினருக்கு தகவல் சொல்லி அவர்களும் காவல் நிலையம் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட ஆசிரியரான பிரேம் ஆனந்த் என்பவர் மது போதைக்கு அடிமையானவர் என்பதும் இவர் சிறுமிகளிடம் படிக்கவில்லை என்று கூறி கண்ட இடங்களில் கை வைத்து எல்லை மீறியதும் தெரிய வந்தது.
இதனை அடுத்து ஆசிரியர் பிரேம் ஆனந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கலை.ரா
அன்பு ஜோதி ஆசிரமம்: மேலும் 5 பேர் காணவில்லை – தொடரும் மர்மம்!
யுஜிசி நெட் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு!