தொடர் பாலியல் தொல்லை: காவல் அலுவலருக்கு கட்டாய ஓய்வு!

தமிழகம்

பெரம்பலூரில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த காவல் அலுவலர் ஹரிகரனுக்கு கட்டாய ஓய்வு வழங்கி திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் உத்தரவிட்டார்.

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றைச் சேர்ந்த ஹரிகரன் பெரம்பலூர் மாவட்டம் காவல் அலுவலகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அமைச்சு பணியாளர் பிரிவு கண்காணிப்பாளராக பணிபுரிந்தார்.

இதனை தொடர்ந்து போலீசாருக்கு ஊதியம் வழங்கும் பிரிவில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.

Sexual harassment of female

2021 செப்டம்பர் மாதம் பெரம்பலூர் மாவட்டம் காவல் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ஆயுதப்படையை சேர்ந்த பெண் காவலர் தனது ஊதிய நிலுவை குறித்து ஹரிகரனை நேரில் சந்தித்துள்ளார்.

பெண் காவலர் ஹரிகரனிடம் தனக்கு நிலுவையில் உள்ள ஊதிய பணப்பலன்களைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கக்கோரிக் கூறியிருக்கிறார்.

அதிலிருந்து ஹரிகரன் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததோடு, இது குறித்து மேல் அதிகாரிகளிடம் தெரிவிக்கக் கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.

கட்டாய ஓய்வு

இது குறித்து பெண் காவலர், மாவட்ட கண்காணிப்பாளர் மணி சண்முகத்திடம் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் அப்போதைய திருச்சி சரக டிஐஜி ராதிகா விசாரணை நடத்தி ஹரிகரனை புதுக்கோட்டைக்கு பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

ஆனால் புதுக்கோட்டைச் செல்ல மறுத்த ஹரிகரன் துறை ரீதியாகத் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, பாலியல் புகார் குறித்து விசாகா குழு நடத்திய விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டது.

ஆகையால், திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் ஹரிகரனுக்கு தண்டனையாகக் கட்டாய ஓய்வு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஊதிய உயர்வு ஒத்திவைப்பு

ஏற்கனவே, ஹரிகரன் பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பெண் உதவியாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார் இருந்தது. அந்த புகாரை விசாரித்த விசாகா குழு கடந்த 2020 ஆம் செப்டம்பர் மாதத்தில் ஹரிகரனின் ஊதிய உயர்வினை 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

ராஜேஷ் தாஸ் வழக்கில் ஆவணங்கள் மாயம்!

+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *