ராணுவம், கடற்படை, விமானப்படை பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடைச் சட்டத்தின் கீழ் புகார் குழுக்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் உள்ள விமானப்படை கல்லூரியில் 2021 ஆம் ஆண்டு நடந்த பயிற்சி வகுப்புக்கு வந்த பெண் அதிகாரியை சக அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக அந்த விமானப் படை பெண் அதிகாரி கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட லெப்டினன்ட் அமிர்தேஷ் என்ற அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்த சூழலில் விமானப்படை சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவரை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று விமானப்படை கல்லூரி கம்மாண்டன்ட் தாக்கல் செய்த மனுவை ஏற்ற கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரை அவர்களிடம் ஒப்படைத்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, கோவை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று (ஜூலை 22) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு நடைபெற்றது.
அப்போது ராணுவம், கடற்படை, விமானப் படை பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடைச் சட்டத்தின் கீழ் உள் புகார் குழுக்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஒன்றிய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பிரியா
’வானவன்’: யோகி பாபுவின் பர்த்டே ஸ்பெஷல்!
“ஸ்டாலினிடம் கேளுங்கள்” : தங்கம் தென்னரசுவுக்கு அதிமுக கண்டனம்!