வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை, இன்று அதிகாலையில் கனமழையாக தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் வடமேற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி வேகமாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மிக அதிக அளவில் மழை பெய்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் எதிர்பார்த்ததை விட வேகமாக இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.

கனமழை முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக இதுவரை 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெளுத்து வாங்கும் மழை!
சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை, அதிகாலை முதல் கனமழையாக தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக கடந்த 2 மணிநேரமாக வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு, நுங்கம்பாக்கம், காசிமேடு, எண்ணூர், ராயப்பேட்டை, திருவொற்றியூர், சேப்பாக்கம், திருவல்லிகேணி, தேனாம்பேட்டை, அண்ணா சாலை, சைதாப்பேட்டை, கிண்டி, ஆகிய பகுதிகளில் அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது.

10 நிமிடத்தில் பெய்த அடைமழை!
அதிலும் அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 6.30 முதல் 6.40 வரை மிக அதிக அளவில் விடாமல் அடைமழை பெய்தது. இந்த 10 நிமிடங்களில் மட்டும் 50 மிமீ மழை வரை பெய்துள்ளது.
இதனால் பொதுமக்கள் பலரும் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் வேலைக்கு செல்வோரும், சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
சில ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
“என்னை வச்சி செஞ்சிட்டாங்க” : உதயநிதி சுவாரஸ்ய பேச்சு!
மக்களே உஷார் : அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை கொட்டப்போகிறது!